கடனை திருப்பி செலுத்தாததால் வீட்டிற்கு சீல் வைத்த வங்கி அதிகாரிகள்

தண்டையார்பேட்டை: காசிமேடு, சேவியர் தெருவை சேர்ந்த ராஜா வீடு கட்டுவதற்காக, கடந்த 2005ம் ஆண்டு அண்ணாசாலை, நேரு பார்க்கில் உள்ள ஐஓபி வங்கியில் ரூ.25 லட்சம் கடன் வாங்கியுள்ளார். பல வருடங்களாகியும் வட்டி, அசல் எதையும் திருப்பி செலுத்தவில்லை.வங்கி நிர்வாகம் இது தொடர்பாக நுங்கபாக்கம், சாஸ்திரி பவன், வசூல் 3வது தீர்பாயம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், வங்கிக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி நேற்று வங்கி அதிகாரிகள், போலீசார் உதவியுடன் அந்த வீட்டிற்கு சீல் வைத்தனர்.

Related Stories: