பாளையன்கோட்டை ஊராட்சியில் புதிய சமுதாய கூடம் கட்டி தர கோரிக்கை

சின்னாளபட்டி: பாளையன்கோட்டை ஊராட்சியில் புதிய சமுதாய கூடம் கட்டி தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம் பாளையன்கோட்டை ஊராட்சியில் 20 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட சமுதாய கூடம் உள்ளது. இந்த சமுதாய கூடம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இங்குள்ள கழிவறைகள் மாட்டுத்தொழுவமாக மாறியதுடன், வைக்கோல் வைக்கும் இடமாக உள்ளது. முறையான இட வசதியும், சமையல் அறை வசதியும், கான்கிரீட் கூரையும் அமைக்கப்படவில்லை.

இதனால் இப்பகுதிமக்கள் அருகில் உள்ள செம்பட்டியில் உள்ள மண்டபங்களில் திருமணம் உள்ளிட்ட விசேஷங்களை நடத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே அமைச்சர் ஐ.பெரியசாமியின் பெயர் சொல்லும் வகையில், தங்கள் பகுதியில் புதிய சமுதாய கூடம் கட்டித் தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழைய சமுதாய கூடத்தில் நடந்த விழாவிற்கு வந்த அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் புதிய சமுதாய கூடம் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக சமுதாய கூடம் கட்டி தர அமைச்சரும் சம்மதித்துள்ளார். இந்நிலையில் ஊராட்சி நிர்வாகம் பழைய சமுதாய கூடத்தை சீரமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 இதுகுறித்து ஒன்றிய குழு உறுப்பினர் பாப்பாத்தி கூறுகையில், ‘‘பழைய சமுதாய கூடத்தை சீரமைப்பதால் எந்த ஒரு பயனும் இல்லை. பழைய மண்டபத்தில் பக்கவாட்டு பகுதியில் தான் சமையல் செய்ய வேண்டிய நிலை உள்ளது’’ என்றார். பாளையன்கோட்டை ஊராட்சியை சேர்ந்த லெனின் கூறுகையில், ‘‘எங்கள் கிராமத்திற்கு புதிதாக சமுதாய கூடம் கட்டித் தருவதாக அமைச்சர் ஐ.பெரியசாமி ஒப்புதல் அளித்துள்ளார். ஆனால் ஊராட்சி நிர்வாகம் பழைய சமுதாய கூடத்தை சீரமைக்க முடிவு செய்துள்ளது. பழைய சமுதாய கூடத்தில் கழிவறை வசதி, குளியலறை வசதி உள்பட எந்த  வசதியும் கிடையாது’’ என்றார்.

Related Stories: