உர கிடங்கை செயல்படுத்த கோரிக்கை

சின்னாளபட்டி: பாளையன்கோட்டை ஊராட்சியில் முடங்கி உர கிடங்கு செயல்படாததால், அப்பகுதி முழுவதும் குப்பைக் கழிவுகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியத்திற்குட்பட்டது பாளையன்கோட்டை ஊராட்சி. இந்த ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் முடங்கி வருகிறது. குறிப்பாக பாளையன்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே, குப்பைகளை தரம்பிரிக்கும் உரக்கிடங்கு முறையாக செயல்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள சாலைகளின் இருபுறமும் குப்பைக்கழிவுகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன.

இதன் காரணமாக அப்பகுதியில் பொதுமக்கள் நடக்க முடியாத நிலை உள்ளது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதியும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்துவதுடன், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் உரக்கிடங்கை செயல்பாட்டிற்கு கொண்டு வர திட்ட இயக்குநர், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: