ஜம்முகாஷ்மீரில் வெவ்வேறு இடங்களில் நிறுத்திவைக்கப்பட்ட இரண்டு பேருந்துகளில் 8 மணி நேரத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததால் பரபரப்பு

காஷ்மீர்: ஜம்முகாஷ்மீரில் வெவ்வேறு இடங்களில் நிறுத்திவைக்கப்பட்ட இரண்டு பேருந்துகளில் 8 மணி நேரத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததால் பரபரப்பு ஏறுபடுத்தியுள்ளது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீர் வருகைதர இருக்கும் நிலையில் உதம்பூர் காவல் நிலைக்கு உட்பட டொமைன் சொயில் பெட்ரோல் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுருந்த பேருந்தில் நேற்று இரவு 10.30 மணி அளவில் வெடிகுண்டு ஏற்பட்டுள்ளது.

இந்த வெடிகுண்டில் நடத்துனர் மற்றும் அவருடைய நண்பர் காயமடைந்தனர். பெட்ரோல் நிலையத்தில்  நிறுத்தி வைக்கப்பட்டுருந்த பேருந்தில் குண்டு வெடித்த நிலையில் 8 மணி நேரம் கழித்து அதாவது, இன்று காலை 5 மணி அளவில் உதம்பூர் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்திவைக்கப்பட்டுருந்த மற்றொரு பேருந்தில் குண்டு வெடித்தது.

தகவல் கிடைத்ததும் அதிரடி படை வீரர்கள் பேருந்து நிலையத்தை சுற்றிலும் குவிக்கப்பட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் வருகை தந்து வேறு எங்கையாவது குண்டுகள் மறைத்துவைக்கப்பட்டுருக்கிறதா என்று சோதனையில் ஈடுப்பட்டனர். மோப்பநாய் உதவியுடன் அங்கு நிறுத்திவைக்கப்பட்டுருந்த பேருந்துகளை அதிரடி படை வீரர்கள் துருவித்துருவி சோதனையில் ஈடுப்பட்டுள்ளார்.

Related Stories: