மனித கழிவுகளை மனிதர்களே அள்ளுவதை ஒருபோதும் நீதிமன்றம் அனுமதிக்காது: ஐகோர்ட் மதுரைக்கிளை

மதுரை: மனித கழிவை அள்ள மனிதர்களை பயன்படுத்தினால் ஆட்சியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவர் என உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. மனித கழிவுகளை மனிதனே அள்ளுவதை ஒருபோதும் நீதிமன்றம் அனுமதிக்காது என ஐகோர்ட் மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும் என்று தெரியவில்லை என்று நீதிபதி வேதனை தெரிவித்திருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொதுநல வழக்கில் தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கு என்பது மனித கழிவுகளை மனிதனே அள்ளுவது  தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த நடவடிக்கை என்பது மனிதர்களை இழிவுபடுத்தும் விசியமாக உள்ளது. ஆகையால் இந்த நடவடிக்கையை உயர்நீதிமன்றம் மர்றும் உச்ச நீதிமன்றம் வன்மையாக கண்டித்து மனித கழிவுகளை மனிதர்கள் அள்ளுவது அரசு தடை செய்யவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை தொடர்ந்து இந்தியா முழுவதும் 2013-ம் ஆண்டு இந்த நடவடிக்கை என்பது முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தது. இதுவரை ஒருசில மாவட்டங்களில் மனித கழிவுகளை அள்ளக்கூடிய நடவடிக்கை என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் தொடர்ந்து உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றது.

எனவே இதை தடை செய்வது மட்டுமல்லாமல் மனித கழிவுகளை மனிதர்கள் அள்ளும் நடவடிக்கையை கைவிட்டு நவீன முறையில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை பயன்படுத்த வேண்டும் என்றுதான் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுதான் இன்று நீதிபதி மகாதேவன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் மனிதக் கழிவுகளை மனிதர்களே எந்த வித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கையில் அள்ளுவது போன்ற புகைப்படங்களை ஆதாரங்களாக தாக்கல் செய்திருந்தார்கள். அந்த ஆதாரங்களை பார்த்த நீதிபதி மகாதேவன் கடும் கோபம் அடைந்து இந்த படம் எங்கு எடுக்கப்பட்டது, எப்போது எடுக்கப்பட்டது எனவும் இதை வன்மையாக கண்டிக்கக்கூடியதாகும் எனக்கூறினார்.

அந்த புகைபடங்கள் சென்னை மாவட்டத்தில் எடுக்கப்பட்டது என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இது சம்பந்தமாக தலைமை செயலாளரை அழைத்து சென்னை மாவட்ட ஆட்சியரை உடனடியாக பணிநீக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படும். ஆனால் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் உண்மையா என்பதை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என கருத்துகளை தெரிவித்த நீதிபதி ஒருபோதும் மனித கழிவுகளை மனிதர்களே அள்ளுவதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாது எனவும் இந்த நிலை தொடர்ந்தால் சம்பந்தபட்ட மாவட்ட ஆட்சியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என எச்சரித்து நீதிபதிகள் தமிழக அரசு இதுகுறித்து விரிவான பதில் அளிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Related Stories: