காங். கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிடும் முடிவில் இருந்து விலகினார் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்..!!

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிடும் முடிவில் இருந்து ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் விலகினார். ராஜஸ்தானில் நடந்த உட்கட்சி பூசல்கள் தொடர்பாக சோனியா காந்தியிடம் அசோக் கெலாட் மன்னிப்பு கோரினார். காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை சந்தித்த பின் போட்டியில் இருந்து விலகுவதாக அசோக் கெலாட் பேட்டியளித்தார். ராஜஸ்தான் முதலமைச்சராக நான் தொடர்வதா? இல்லையா? என்பதை சோனியா காந்தி முடிவு செய்வார் எனவும் கெலாட் கூறினார்.

Related Stories: