அம்பத்தூரில் புதிய தொழில் நுட்பத்தில் நவீன டிரான்ஸ்பார்மர்: எம்எல்ஏ இயக்கி வைத்தார்

அம்பத்தூர்: எரிசக்தி துறை சார்பில், சென்னையில் புதிய தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆர்எம்யு  டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் 28 சட்டமன்ற தொகுதிகளில் ரூ.360.63 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள ஆர்எம்யு டிரான்ஸ்பார்மர்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்துள்ளார்.

இதன் ஒரு பகுதியாக அம்பத்தூரில் ஆர்எம்யு டிரான்ஸ்பார்மாரை சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் ரிப்பன் வெட்டி இயக்கிவைத்தார். பின்னர் அவர் பேசுகையில்,“புதிய தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஆர்எம்யு டிரான்ஸ்பார்மர் உயர் மின்னழுத்தம் மற்றும் குறைந்த மின்னழுத்த பிரச்னை வராமல் தடுக்கும்.  மின்வெட்டு நடந்த இடத்தை துரிதமாக கண்டறியும் வகையில் சாதனம் பொருத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு சீரான மின்சாரம் 24 மணி நேரமும் கிடைக்கும் வகையில் முதலமைச்சர், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மழை காலத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதை தடுக்கும் வகையிலும் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி மக்களின்  பயன்பாட்டுக்காகவும் புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.  இதில், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: