குமரி மாவட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை டோஸ் 7.41 லட்சம் பேர் செலுத்தவில்லை: இலவசமாக போட்டுக்கொள்ள காலக்கெடு நாளை நிறைவு

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் 3 வதாக செலுத்த வேண்டிய முனனெச்சரிக்கை டோஸ் செலுத்தாமல் 7 லட்சத்து 41 ஆயிரத்து 360 பேர் உள்ளனர். இதற்கிடையே இந்த தடுப்பூசியை இலவசமாக செலுத்திக்கொள்வதற்கான காலக்கெடு நாளை (30ம் தேதி) நிறைவு பெறுகிறது.

உலகை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தொற்று 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ம் தேதி முதல் இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதில் 93 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். 2020 மார்ச் 14ம் தேதி கொரோனா வைரஸ் தொற்றை இந்திய அரசு தேசிய பேரிடராக அறிவித்தது. கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு, வாகன போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. முழு ஊரடங்குகள் பல கட்டங்களாக நடைமுறைக்கு வந்தது.

2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 16ம் தேதி இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பூசி செலுத்துதல் தொடங்கியது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகியன பயன்படுத்தப்பட்டன. இவை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. இரண்டு டோஸ் செலுத்திக்கொண்டவர்களுக்கு மூன்றாம் டோஸ் பூஸ்டர் தடுப்பூசியும் அறிமுகம் செய்யப்பட்டது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இலவசமாக செலுத்தவும் கால அவகாசம் வழங்கப்பட்டது. இதற்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. முன்னெச்சரிக்கை டோஸ் இலவசமாக செலுத்திக்கொள்ள நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் நிறைவு பெற்றுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் ெபருமளவு கட்டுபாட்டிற்குள் வந்துள்ளது. இருப்பினும் பாதிப்பு முற்றிலும் நீங்கவில்லை. கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து காணப்படுகிறது. அதே  வேளையில் மக்களிடம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் ஆர்வம் வெகுவாக குறைந்துள்ளது. இதுவரை குமரி மாவட்டத்தில் மொத்தம் 27 லட்சத்து 85 ஆயிரத்து 647 ேடாஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் டோஸ் 13 லட்சத்து 95 ஆயிரத்து 74 ஆகும். இரண்டாம் டோஸ் 11 லட்சத்து 85 ஆயிரத்து 186 ஆகும். முன்னெச்சரிக்கை டோஸ் 2 லட்சத்து 5 ஆயிரத்து 387 ஆகும்.  பெண்கள் 13 லட்சத்து 78 ஆயிரத்து 834 டோஸ்களும், ஆண்கள் 12 லட்சத்து ஆயிரத்து 41 டோஸ்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

 ேகாவிஷீல்டு தடுப்பூசி அதிகபட்சமாக 23 லட்சத்து 70 ஆயிரத்து 289 டோஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. கோவாக்சின் 223 லட்சத்து 22 ஆயிரத்து 797 டோஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் விழிப்புணர்வு குறைந்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை டோஸ் எனப்படும் மூன்றாவது ேடாஸ் செலுத்தாமல் தகுதியுடைய 7 லட்சத்து 41 ஆயிரத்து 360 பேர் குமரி மாவட்டத்தில் உள்ளனர். இதுவரை வழங்கப்பட்ட இலவச காலக்கெடு நாளை 30ம் தேதியுடன் நிறைவு பெற உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை டோஸ் கட்டணம் அளித்து செலுத்திக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை டோஸ் இன்றும், நாளையும் மட்டும் இலவசமாக செலுத்திக்கொள்ளலாம். ஏற்கனவே இந்த வாய்ப்பு முடிவுக்கு வந்த நிலையில் சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவையொட்டி முன்னெச்சரிக்கை டோஸ் இலவசமாக செலுத்திக்கொள்வதற்கான காலக்கெடு மேலும் நீட்டிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இனி ஒன்றிய அரசு இது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டால் மட்டுமே இலவசமாக செலுத்திக்ெகாள்ள இயலும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அதிகரிக்கும் கொரோனா தொற்று

குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 4 நாட்களாக 30, 21, 8, 16 என்று தினசரி பாதிப்புகள் கண்டறியப்பட்ட நிலையில் நேற்று மாலை வரை 38 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருந்தது. இரவு இந்த எண்ணிக்கை 40ஐ கடந்திருந்தது.

Related Stories: