சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் செயல்பட்ட சன் பார்மா மருந்து ஆலைக்கு ரூ.10 கோடி அபராதம்; தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம்

சென்னை: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் செயல்பட்டு வரும் சன் பார்மா மருந்து ஆலை சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்ததால் ரூ.10 கோடி அபராதம் விதித்தது தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம்.  1994 முதல் 2006வரை ஆலையில் நடந்த விரிவாக்கப் பணிகளுக்கு EIA NOTIFICATION 1994ன் கீழ் சுற்றுச்சூழல் அனுமதி பெறாததால் விரிவாக்கம் செய்தது சட்டவிரோதம் எனவும் தீர்ப்பு.

ஆலை செயல்பாட்டால் உண்டான சேதம் குறித்து மாசு கட்டுப்பாடு வாரியம் உரிய ஆய்வு செய்து முழுமையான இழப்பீட்டை சன் பார்மாவிடம் இருந்து பெற வேண்டும் எனவும் அந்தத் தொகையை வைத்து பறவைகள் சரணாலயத்தைப் பாதுகாக்க செயல் திட்டம் உருவாக்க வேண்டும் எனவும் தீர்ப்பு. சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் சன் பார்மா ஆலை இயங்கி வருவதால் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் எம்.ஆர்.தியாகராஜன் என்பவர் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் 2020ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில் இன்று தீர்ப்பு.

ஆலையின் விரிவாக்கத்திற்கு மார்ச் 2022ம் ஆண்டில் வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதிக்கு எதிராகத் தொடரப்பட்ட மனு தென்மண்டல தேசிய  பசுமைத் தீர்ப்பாயத்தின் இரண்டாவது அமர்வில் நிலுவையில் இருப்பதால் ஆலையை மூடுவது குறித்து இந்த மனுவில் உத்தரவிடவில்லை எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: