சீனா அனுப்பிய தியான்வென் -1 விண்கல ஆய்வில் கண்டுபிடிப்பு: செவ்வாய் ஆராய்ச்சியில் அமெரிக்காவுடன் சீனா போட்டி

சீனா: செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கு சாத்திய கூறுகளை சீனா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக வெளியாகியுள்ள ஆய்வறிக்கை மனிதர்கள் குடியேறுவது குறித்த எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவிற்கு புதிய போட்டியாளராக முளைத்துள்ள சீனா நிலவை தொடர்ந்து செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறுவதற்கான சாத்திய கூறுகளை ஆராய்வதில் முனைப்பு காட்டுகிறது. இதற்காக சீனா அனுப்பிய தியான்வென் -1 விண்கலம் கடந்த மே மாதம் 15-ஆம் தேதி செவ்வாய் கிரகத்தின் தென்கோலத்தில் உட்டோபியா பிளேனிஷியா என்ற இடத்தில் தரையிறங்கியது.

அதிலிருந்து ஜூராங் ரோவர் செவ்வாயின் மேற்பரப்பில் இருந்து இறங்கி ஆய்வு செய்தது. இந்த ரோவர் கடந்த 113 நாட்களில் 1171 மீட்டர் தூரம் பயனித்து செவ்வாயின் மேற்பரப்புக்கு கீழே சுமார் 80 மீட்டர் ஆழம் வரை ஊடுருவி ஆய்வு செய்தது. இதில் கிடைத்த தரவுகள் அடிப்படையில் சீனா விஞ்ஞானிகள் எழுதியுள்ள ஆராய்ச்சி அறிக்கை சர்வதேச அறிவியல் இதழ் ஆன நேட்ச்சரில் வெளியாகியுள்ளது. செவ்வாய் கிரகம் தன்னகத்தை கொண்டுள்ள தண்ணீரை கடந்த 300 கோடி ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக இழந்து வருகிறது என்ற கருதுகோளுக்கு எதிராக அந்த அறிக்கை அமைந்துள்ளது.

பூமியின் மேற்பரப்பை ஊடுருவி ஆராய்ச்சி செய்ததன் மூலம் செவ்வாய் கிரகம் குறித்த புதிய உண்மைகளை சீனா உலகுக்கு வழங்கியுள்ளது. தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக கூறும் சீனா ஆய்வாளர்கள் செவ்வாயின் சுற்றுச்சூழலிலும், கனிமச்சேர்க்கையிலும் அதன் தாக்கத்தை ஆராய்வதில் அவசியம் என தெரிவித்துள்ளன. தியான்வென் -1 விண்கலம் தொடர்ந்து வெற்றிகரமாக இயங்குவதாகவும் இதுவரை 1500 ஜிகாபைட் தரவுகளை அள்ளித்தந்திருப்பதாகவும் சீனா ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அவற்றை முழுமையாக ஆராய்ச்சி செய்யும் போது செவ்வாய் குறித்த மேலும் பல மர்ம முடிச்சுகள் அவிலும்.

Related Stories: