தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நடக்கவிருந்த ஊர்வலத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் காவல்துறையினர் அனுமதி மறுப்பு

சென்னை: தமிழகத்தில் அக்.2ம் தேதி நடைபெறவிருந்த ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு பல மாவட்டங்களில் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.  சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளிடம் போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. கடலூர், திருச்சி, வேலூர், திருப்பத்தூர், திண்டுக்கல், ராமநாதபுரம், திருவாரூர், தென்காசி, புதுக்கோட்டை, திருவள்ளூரில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் வரும் 2-ம் தேதியன்று தமிழகம் முழுவதும் 52 இடங்களில் ஊர்வலம் நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால் அதற்கு போலீசார் வழங்க தாமதித்த காரணத்தால் நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற முயற்சித்தது. சென்னை உயர்நீதிமன்றமும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்க உத்தரவிட்டது.

இந்நிலையில், திருச்சி, வேலூர், திருப்பத்தூர், திண்டுக்கல், ராமநாதபுரம், திருவாரூர், தென்காசி, புதுக்கோட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு நள்ளிரவில் காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கடந்த 22.09.2022 அன்று தேசிய புலனாய்வு முகாமை இந்தியா முழுவதும் ஆய்வு நடத்திய போது பிஎஃப்ஐ சம்பந்தப்பட்டவர்கள் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர். அதன் எதிரொலியாக பல்வேறு இடங்களில் போராட்டங்களும், வன்முறை சம்பவங்களும் நடைபெற்றது. இந்த சூழலில் பொதுமக்கள் அமைதியாக வாழ வழிசெய்யவேண்டும்.

தமிழகம் முழுவதும் அமைதியான சூழல் நிலவ காவல்துறை மும்மரமாக செயல்பட்டு வருகிறது. எனவே வருகின்ற 2-ம் தேதி  ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஊர்வலத்திற்கு தங்களால் அனுமதி வழங்க முடியாது என நள்ளிரவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: