தஞ்சாவூர் அருகே புகார் மீது நடவடிக்கை எடுக்காத 3 இன்ஸ்பெக்டருக்கு ரூ.3 லட்சம் அபராதம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயில் சிலைகள், தகடுகள் திருட்டு போனது தொடர்பாக வெங்கட்ராமன் என்பவர் பந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தாமல், புகார் அளித்த தன்னை விசாரணை என்ற acபெயரில் அலைக்கழித்ததாக வெங்கட்ராமன் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார். அதில், பந்தலூர் காவல் நிலைய அப்போதைய இன்ஸ்பெக்டர்கள் ஜெயமோகன், சிந்து நதி மற்றும் பகவதி சரவணன் ஆகியோர் மீது குற்றம் சாட்டியிருந்தார்.இந்நிலையில் நேற்று இந்த புகாரை விசாரித்த மனித உரிமை ஆணையம், புகார் குறித்து நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரை அலைக்கழித்து மனஉளைச்சலை ஏற்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர்களிடம் இருந்து தலா ரூ. 1 லட்சம் அபராதம் வசூலித்து வெங்கட்ராமனுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Related Stories: