தமிழக முதல்வர் குறித்து அவதூறு தாராபுரம் பாஜ நிர்வாகி கைது

தாராபுரம்: தமிழக முதல்வர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பரப்பிய தாராபுரம் பாஜ நிர்வாகி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை சேர்ந்தவர் வினித்குமார் (30). இவர், தாராபுரம் பாஜ தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியாக உள்ளார். இவர், தனது பேஸ்புக் பக்கத்தில், தமிழக முதல்வர் மற்றும் தமிழக காவல் துறையை கண்டித்தும், பிரச்னைக்குரிய வாசகங்களை பதிவு செய்தும் அவதூறு கருத்துக்களை பரப்பினார். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் வினித்குமார் வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து 10க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்து சென்று வினித்குமாரை சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: