நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பு கலந்தாய்வில் நெல்லை தாய், மகன்

நெல்லை: நெல்லையை சேர்ந்த டாக்டர் ஒருவர் ஏரலில் மருத்துவராக உள்ளார். இவரது மனைவி நர்சாக பணியாற்றுகிறார். இவரது மகன் பாளை. புஷ்பலதா பள்ளியில் பிளஸ்2 முடித்து நீட் தேர்வு எழுதினார். இவர் நீட் தேர்வில் 660 மதிப்பெண் எடுத்துள்ளார். அவருக்கு மருத்துவக் கல்வியில் இடம் கிடைப்பது உறுதி என்ற நிலையில், அவரது 45 வயது நிரம்பிய தாயும் நீட் தேர்வு எழுதி 176 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். அந்த மாணவரின் தாய் நெல்லை டவுன் கல்லனை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1994ல் பிளஸ் 2 முடித்தார். நர்சாக பணியாற்றும் இவரும் மருத்துவராக விரும்பி தனது மகனுடன் நீட் தேர்வுக்கு பயிற்சி எடுத்தார். அவரது டாக்டர் கணவரும் ஊக்கம் அளித்தார். இதன் பலனாக 176 மதிப்பெண் எடுத்துள்ள அரசு பள்ளிகளுக்கான 7.5 சதவீதம் சிறப்பு இடஒதுக்கீட்டில் இடம் பெற முயற்சி செய்து வருகிறார். இதற்காக இவருக்கு கடந்த 1994 வரை கல்லனை அரசுப்பள்ளியில் பயின்றதற்கான சான்றிதழை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருப்பதி வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மாணவரின் தாய் 176 மதிப்பெண்கள் ெபற்றுள்ள நிலையில், அவருக்கு தனியார் மருத்துவக் கல்லூரியில் சுயநிதி ஒதுக்கீட்டில் சேரும் வாய்ப்பு உள்ளது என கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

Related Stories: