விபத்தில் மூளை சாவு மாணவன் உறுப்புகள் தானம்

ஒடுகத்தூர்: வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த சின்னபள்ளிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்(40), கூலித்தொழிலாளி. இவரது 2வது மகன் துர்கபிரசாத்(12), அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 25ம் தேதி துர்கபிரசாத் சைக்கிளில் பாக்கம் கிராமத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் சைக்கிள் மீது மோதியது. வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவனுக்கு மூளை சாவு ஏற்பட்டது. இதையடுத்து சிறுவனின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு சென்னையில் உள்ள 2 தனியார் மருத்துவமனை களுக்கு அனுப்பப்பட்டது.

Related Stories: