முதுநிலை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

சென்னை: தமிழக மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி: மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான  தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டன. இவை அனைத்திற்குமான கலந்தாய்வு இணையதளம் வாயிலாக நடைபெறும். கலந்தாய்வு அட்டவணை பட்டியல் இணையதளத்தில்  வெளியிடப்படும். மருத்துவ பட்ட மேற்படிப்பு, பட்டய படிப்பு, மேற்படிப்புகளுக்கான அரசு கல்லூரிகளில் 1162 இடங்களும், மருத்துவ பட்ட, பட்டய, மேற்படிப்புகளுக்கான நிர்வாக கல்லூரிகளில் 763 இடங்களும், பல் மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான அரசு கல்லூரிகளில் 31 இடங்களும், பல் மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான சுயநிதி கல்லூரிகளில் 296 இடங்களும், தேசிய வாரிய பட்டபடிப்பு இடங்கள் 94 ஆக மொத்தம் 2,346 இடங்களும் உள்ளன. விண்ணப்பித்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 11,178 ஆகவும் உள்ளன. மேலும், மருத்துவ மாணவர்கள் மற்றும் பல் மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு நேற்று வரை விண்ணப்பங்கள் பெற பதிவு செய்தவர்கள் 21,183. இதுவரை 12,429 பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. முதல் நாளான இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெறும்.

Related Stories: