சென்னை ஏர்போர்ட்டில் தலைமறைவு குற்றவாளி சிக்கினார்

சென்னை: தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ் (49). இவர், மீது கடந்த 2020ம் ஆண்டு வரதட்சணை கொடுமை வழக்கு பதிவாகியிருந்தது. இதைத் தொடர்ந்து தலைமறைவான ஸ்ரீநிவாசை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடினர். இந்நிலையில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் சிங்கப்பூர் செல்லும் விமானம் தயார்நிலையில் இருந்தது. இதில் செல்லவேண்டிய பயணிகளின் பாஸ்போர்ட் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, அதே விமானத்தில் சிங்கப்பூர் தப்பிச்செல்ல ஸ்ரீனிவாசும் வந்திருந்தார். அவரது பாஸ்போர்ட் ஆவணங்களை சோதனை செய்ததில், அவர் கடந்த 2 ஆண்டுகளாக ஐதராபாத் போலீசாரால் தேடப்பட்டு வரும் தலைமறைவு குற்றவாளி எனத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவரது பயணத்தை ரத்து செய்து, தனியறையில் ஸ்ரீனிவாசை குடியுரிமை அதிகாரிகள் அடைத்து வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் ஐதராபாத் போலீசார் விமானத்தில் சென்னைக்கு விரைந்து வருகின்றனர்.

Related Stories: