அக். 2, 9ம் தேதி டாஸ்மாக் மூடல்

சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: காந்தி ஜெயந்தி மற்றும் மிலாது நபியை முன்னிட்டு அக்டோபர் 2 மற்றும் 9ம்தேதிகளில், சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், எப்எல்2 உரிமம் கொண்ட கிளப்புகளை சார்ந்த பார்கள், எப்எல்3 உரிமம் கொண்ட ஓட்டல்களைச் சார்ந்த பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூட வேண்டும். அக்டோபர் 2 மற்றும் 9ம்தேதிகளில் மதுபானம் விற்பனை செய்யக் கூடாது. தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: