ஒன்றிய அரசு பணிக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ்.களை உடனே அனுப்புங்கள்: மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுரை

புதுடெல்லி: ஒன்றிய அரசில் பணி செய்வதற்கு  மாநிலங்கள் கூடுதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை விடுவிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு வலியுறுத்தி உள்ளது. டெல்லியில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதன்மை செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பணியாளர், பொது நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் தொடர்பான பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் பேசிய ஒன்றிய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், ‘‘ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அகில இந்திய சேவை அதிகாரிகளை நியமிப்பது குறித்து, ஏற்கனவே கட்டமைப்பு வகுக்கப்பட்டுள்ளது. இதை உணர்வுபூர்வமாக அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அகில இந்திய சேவை அதிகாரிகளை ஒன்றிய அரசு பணிக்கு மாற்றுவதற்கு ஏதுவாக, மாநிலங்கள் அவர்களை விடுவிக்க வேண்டும். ஒன்றிய அரசில் இந்த அதிகாரிகளுக்கு பற்றாக்குறை உள்ளது. எனவே, இந்த அதிகாரிகளை ஒன்றிய அரசு பணியில் ஈடுபடுத்த, அவர்களை மாநிலங்கள் விடுவிக்க வேண்டும்,’’ என்றார்.

Related Stories: