பாக். மருத்துவமனையில் தீவிரவாதிகள் தாக்குதல்: சீனர் பரிதாப பலி

கராச்சி: பாகிஸ்தானில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் சீனாவை சேர்ந்தவர் பலியானார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சி சத்தார் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சீனர்கள் சிலர் சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று நோயாளிகள் போல் மருத்துவமனைக்கு மர்ம நபர்கள் நுழைந்தனர். அப்போது அங்கு சிகிச்சை  பெற்று வந்த சீனர்கள் மீது அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில், சீனர் ஒருவர் பலியானார்.

மேலும், 2 பேர் படுகாயமடைந்தனர். கராச்சி சீனியர் எஸ்பி கூறும்போது, ‘‘துப்பாக்கிசூட்டில் பலியானவர், படுகாயமடைந்தவர்கள் மூவரும் சீன பிரஜைகள். படுகாயம் அடைந்தவர்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது’’ என்றார்.

Related Stories: