×

கச்சா எண்ணெய் முதுகை முறிக்கிறது: ஜெய்சங்கர் வேதனை

வாஷிங்டன்: ‘ரஷ்யா- உக்ரைன் போரால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருப்பது, இந்தியாவின் முதுகை முறிக்கிறது,’ என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். அமெரிக்கா சென்றுள்ள ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கனை சந்தித்து பேசினார். பின்னர், பிளிங்கனுடன் அவர் கூட்டாக பேட்டி அளித்தார். அப்போது ஜெய்சங்கர் கூறுகையில், ‘ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.

வளர்ந்து வரும் நாடான இந்தியாவின் தனிநபர் பொருளாதாரம் 2000 டாலர்கள்தான். இதனால் எண்ணெய் விலை எங்களுக்கு பெரும் பாதிப்பாக உள்ளது. கடந்த சில மாதங்களாக எரிசக்தி சந்தை பெரும் அழுத்தத்தில் உள்ளது. விலை அதிகரிப்பு ஒரு பக்கம் அழுத்தம் கொடுக்கிறது என்றால் மறுபக்கம் அது கைக்கு வந்து சேர்வதிலும் சிரமம் உள்ளது. ரஷ்யாவில் இருந்து இந்தியாவின் கச்சா எண்ணணெய் இறக்குமதி ஏப்ரல் முதல் 50 மடங்கு அதிகரித்துள்ளது.

உக்ரைன் போருக்கு முன்பு இந்தியா இறக்குமதி செய்த மொத்த கச்சா எண்ணெய்யில் 0.2 சதவீதம் மட்டுமே ரஷ்ய எண்ணெய் இருந்தது. மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார தடைகள் ரஷ்யாவின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதால் அது விலை அதிகரிப்பில் தான் பிரதிபலிக்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்தியாவின் முதுகை முறிக்கிறது,’ என்றார்.

Tags : Jaishankar , Crude oil breaks back: Jaishankar anguish
× RELATED மாஸ்கோவில் ஜெய்சங்கர் பேட்டி இந்தியா-ரஷ்யா உறவு வலுவானது