சவுதி இளவரசர் பிரதமர் ஆனார்: மற்ற பிள்ளைகளுக்கு அமைச்சர் பதவி

துபாய்: சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மானை அந்நாட்டின் புதிய பிரதமராக நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மன்னராட்சி அமலில் உள்ள நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்று. இதன் அரசராக இருக்கும் சல்மான் பின் அப்துல் அஜீஸ், இந்தாண்டு 2 முறை உடல்நலக் குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனவே, தனது மூத்த மகன் முகமது பின் சல்மானை அரசராக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்நிலையில், அரசர் அப்துல் அஜீஸ் நாட்டின் அமைச்சரவையை கலைத்து புதிய அமைச்சரவையை நிறுவி உள்ளார். அதன்படி, 37 வயதாகும் சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான், சவுதி அரேபியாவின் பிரதமராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இவர் ஏற்கனவே, நாட்டின் துணை பிரதமராகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றியவர். அனைவராலும் எம்பிஎஸ் என்று அறியப்பட்ட இளவரசர் முகமது பின், வரும் 2030ம் ஆண்டிற்குள் சவுதி அரேபியாவின் பொருளாதாரத்தை உயர்த்துவதாகவும் கச்சா எண்ணெயை மட்டுமே நம்பியிருக்கும் நிலையை மாற்றி காட்டுவதாகவும் சூளுரைத்துள்ளார். இதேபோன்று, அரசர் சல்மானின் 2வது மகன் இளவரசர் காலித் பின் சல்மான் பாதுகாப்பு அமைச்சராகவும், இளவரசர் பைசல் பின் பர்கான் அல் சவுத் வெளியுறவு அமைச்சராகவும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

Related Stories: