கொல்கத்தாவில் லார்ட்ஸ் பால்கனி!

2002ல் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் (முத்தரப்புதொடர்) யுவராஜ் - கைப் ஜோடியின் அபாரமான ஆட்டத்தால் இந்தியா 325 ரன் என்ற கடினமான இலக்கை கடைசி ஓவரில் வெற்றிகரமாகத் துரத்தி அசத்தியது. அந்த அபார வெற்றியை கொண்டாடிய கங்குலி தனது டி-ஷர்ட்டை அவிழ்த்து தலைக்கு மேலாக சுழற்றிய சம்பவம் மறக்க முடியாத வரலாற்றுப் பதிவானது. மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பிளின்டாப் அவ்வாறு கொண்டாடியதற்கு பதிலடி கொடுப்பதற்காகவே தான் அப்படி நடந்துகொண்டதாக கங்குலி பின்னர் தெரிவித்தார்.

இந்நிலையில், துர்கா பூஜை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கொல்கத்தாவில் லண்டன் லார்ட்ஸ் மைதான பால்கனியைப் போன்றே அச்சு அசலாக ஒரு பந்தலை வடிவமைத்துள்ளனர். அங்கு சென்ற கங்குலி தேசியக் கொடியை ஏந்தியபடி ரசிகர்களைப் பார்த்து உற்சாகமாக கையசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

Related Stories: