×

சினைப்பை சிக்கல் கவனம் அவசியம்

சினைப்பை கட்டிகள் எனப்படும் பாலிசிஸ்டிக் ஓவரீஸ் சிண்ட்ரோம் சுருக்கமாக பி.சி.ஓ.எஸ் இன்று ஐந்தில் ஒரு பெண்ணுக்கு இருக்கும் பிரச்சனையாக உள்ளது. மரபியல் காரணிகள் முதல் லைஃப் ஸ்டைல் வரை பல காரணங்கள் உள்ள இந்தப் பிரச்சனையை ஹெல்த்தியான உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் எதிர்கொள்ளலாம்.

சமவிகிதமான உணவுமுறையே வயிற்றில் உள்ள பாக்டீரியா உள்ளிட்ட நுண்ணியிர்களின் சமவிகிதத்தை சரியாகப் பராமரித்து நமது இன்சுலின் சுரப்பை சீராக்கி ஒழுங்கான மாதவிடாய்க்கு வழிவகுக்கிறது. எனவே, சமச்சீர் உணவுகள் முக்கியம். லோ கிளைசெமிக் இண்டக்ஸ் கொண்ட உணவுகளை உடலில் அதிகமாகச் சேர்க்கலாம். முழுதானியங்கள், நட்ஸ், ஸ்டார்ச் நிறைந்த காய்கறிகள், பழங்கள், லோ கார்போ உணவுகள்ஆகியவை நல்லது.

உட்புற புண்கள் மற்றும் வீக்கங்களைக் குணமாக்கும் ஆன்டி-இன்ஃபளமேட்டரி உணவுகளான பெர்ரி, நெல்லிக்காய், மீன், கீரைகள், எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயில் ஆகியவற்றைச் சேர்க்கலாம். தேங்காய், நெய், ஆலிவ் விதைகள் ஆகியவற்றில் உள்ள கால்சியம் மற்றும் நல்ல கொழுப்பு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைக்கிறது. வாழைப்பழம் ஜீரணத்தை அதிகரிப்பதோடு கார்போஹைட்ரேட்டையும் உடலுக்கு வழங்குகிறது. கேழ்வரகில் உள்ள சத்துக்கள் பி.சி.ஓ.எஸ் பிரச்சனையால் முகத்தில் ஏற்படும் பருக்களையும் உட்புறக் கட்டிகளையும் ஓரளவு கட்டுப்படுத்தும் என்பதால் அதையும் உணவில் சேர்க்கலாம்.

தொகுப்பு:  இளங்கோ

Tags :
× RELATED கருப்பு பூஞ்சை... இன்னும் விழிப்புணர்வு தேவை!