இந்தியா கேட் பகுதியில் பதுக்கம்மா பண்டிகை களைகட்டியது

புதுடெல்லி: இந்தியா கேட் பகுதியில் பதுக்கம்மா பண்டிகை களைகட்டியது. ஏராளமான பெண்கள் திரண்டு, பூக்களை வைத்து கும்மியடித்து ஆடினர். இதை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டுகளித்தனர். நாடுமுழுவதும் நவராத்திரி பண்டிகை பல விதங்களில் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் வீடுகளிலும் கோயில்களிலும் கொலு வைத்து கொண்டாடுகின்றனர். பாடல்களை பாடி சுண்டல் படைத்து அம்மனை அழைக்கின்றனர். தெலங்கானாவில் பதுகம்மா பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. மகா கெளரியை பிரதான தெய்வமாக கொண்டாடும் பண்டிகையில் பெண்கள் உற்சாகமாக மலர்களை அலங்கரித்து கொண்டாடுகின்றனர்.

தெலங்கானாவில் பித்ருபட்சம் அமாவாசை தொடங்கி துர்காஷ்டமி வரை கொண்டாடப்படுகிறது. 9 நாட்கள் சதுலா பதுக்கம்பா, பெட்ட பதுக்கம்மா என்று கொண்டாடுகின்றனர். மலர்களை அழகாக அலங்கரித்து காவல் தெய்வமான மகா கவுரியை வழிபடுகின்றனர். இந்த விழாவின் போது பெண்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டு நகைகளை அணிந்து கொண்டு உற்சாகமாக கொண்டாடுகின்றனர். தெலங்கானாவில் இந்த பண்டிகை மாநிலம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி டெல்லி இந்தியா கேட் பகுதியிலும் இந்த பண்டிகை களைகட்டியது. ஏராளமான பெண்கள் திரண்டு, பூக்களை வைத்து கும்மியடித்து ஆடினர். இதை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

Related Stories: