தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிப்பு

மும்பை: இந்தியா-தென்ஆப்ரிக்கா அணிகள் இடையே இன்று தொடங்கும் 3 டி.20 போட்டிகளுக்கு பின்னர் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி வரும் 6ம் தேதி லக்னோ, 2வது போட்டி 9ம்தேதி ராஞ்சி, 3வது மற்றும் கடைசி போட்டி 11ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது. இதில், உலக கோப்பை டி.20 தொடரில் இடம் பெற்றுள்ள அனைத்து வீரர்களுக்கும் ஓய்வு அளிக்கப்படுகிறது. முதல் ஒருநாள் போட்டி நடைபெறும் 6ம்தேதி அன்றே உலக கோப்பைக்கான இந்திய அணி ஆஸ்திரேலியா புறப்படுகிறது. இதனால் ஒருநாள் தொடருக்கான அணியில்  ஷிகர் தவான்  கேப்டனாகவும், சஞ்சு சாம்சன் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட உள்ளனர்.

சுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், பிருத்வி ஷா, ராகுல் திரிபாதி, ரஜத் படிதார், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், பிரஸ்த் மாலிக். , குல்தீப் சென் ஆகியோர் அணியில் இடம்பிடிப்பார்கள் என தெரிகிறது. மேலும் பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணன் செயல்பட உள்ளார்.

Related Stories: