ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: கொரோனா தொற்று பாதிப்பு தொடங்கிய போது 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 5 கிலோ உணவு தானியங்கள் நாடு முழுவதும் இலவசமாக வழங்குவதாக அறிமுகப்படுத்தப்பட்டது. பலமுறை நீட்டிக்கப்பட்ட இந்த திட்டம் நாளை மறுநாள் செப்-30ஆம் தேதி உடன் முடிவடைகிறது. இந்நிலையில் மேலும் 3 மாதங்களுக்கு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இலவச ரேஷன் திட்டமான கரிப் கல்யாண் அன்ன யோஜனா மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் 5 கிலோ புழுங்கல் அரிசி வழங்கப்பட்டு வருகிறது.  கொரோனா அச்சுறுத்தலின் போது மக்களின் பொருளாதார நிலைமையை சீர் செய்யும் வகையில் வகையிலும், கோடிக்கணக்கான மக்களை பாதுகாக்கும் வகையிலும், பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் ஒன்றிய அரசினால் அறிமுகபடுத்தப்பட்டது.  இதன்மூலம் உணவு தானியத்துடன் ஒரு வீட்டிற்கு ஒரு மாதத்திற்கு கூடுதலாக 5 கிலோ அரிசி கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

கொரோனா தொற்று குறைந்த பிறகு மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இத்திட்டத்திற்காக கூடுதலாக 80 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இத்திட்டம் மேலும் சில மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் ரேஷனில் இலவச அரிசி வழங்கும் திட்டத்தை மேலும் 3 மாதத்திற்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 30ம் தேதியுடன் முடியவிருந்த கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: