கூட்டுறவு துறை சார்பில் சாலையோர கடைகளுக்கு கேஸ் சிலிண்டர்: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

சென்னை: முகவரி இல்லாமல் இருக்கும் சாலையோர கடைகளுக்கு கூட்டுறவு சொசைட்டி மூலம் சாலையோர கடைகளுக்கு கேஸ் சிலிண்டர் வழங்கப்படும்  என்று கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். சென்னை, கூட்டுறவு துறை சார்பில் சாலையோர கடைகளுக்கு கேஸ் சிலிண்டர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சாலையோர கடைகளுக்கு கூட்டுறவு துறை மூலம் அக்டோபர் 6 முதல் 2 கிலோ,5 கிலோ கேஸ் சிலிண்டர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டமானது பரிசோதனை முறையில் ஒரு வாரத்தில் திருவல்லிக்கேணியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும், கூட்டுறவு சொசைட்டி மூலம் கேஸ் சிலிண்டர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 14 கிலோ 19 கிலோ எடையுள்ள வாங்க வேண்டும் என்றால் அதிக வழிமுறைகள் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் ரேஷன் கடைகள் மூலம் கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதற்கு முன்னர் பரிசோதனை முறையில் கூட்டுறவு சொசைட்டி மூலம் சாலையோர கடைகளுக்கு கேஸ் சிலிண்டர் வழங்கும் திட்டம் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கப்படயுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories: