திருவள்ளூர் அருகே மாடு மேய்க்க சென்ற 17 வயது சிறுமியை மிரட்டி கூட்டு பலாத்காரம்: மனஉளைச்சலில் தீக்குளித்த சிறுமிக்கு தொடர் சிகிச்சை..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே மாடு மேய்க்க சென்றபோது கூட்டு பாலியல் பலாத்காரத்திற்குள்ளான சிறுமி, வேதனை தாங்க முடியாமல் தீக்குளித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட மோவூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, அங்குள்ள மாந்தோப்பில் கடந்த 23ம் தேதி மாடு மேய்க்க சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 5 இளைஞர்கள், அந்த சிறுமியை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அத்துடன் அந்த நிகழ்வை செல்போனில் படம் பிடித்து வெளியே கூறினால், சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் சிக்கி தவித்த சிறுமி, மறுநாள் காலை வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து ஊற்றி தீயிட்டுக்கொண்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் எதிர்காக இவ்வாறு நடந்துகொண்டார் என்பதை பெற்றோரால் யூகிக்க முடியவில்லை. சிகிச்சையால் நினைவு திரும்பியதும், நடந்த சம்பவத்தை உறவினர்களிடம் சிறுமி கூறியுள்ளார். இதனால் உச்சகட்ட அதிர்ச்சியில் மூழ்கிய அவருடைய பெற்றோர், திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தனர். சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மொத்தத்தில் இந்த சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: