நவராத்திரி பூஜை துவக்கம் மார்த்தாண்டம் மார்க்கெட்டில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு

மார்த்தாண்டம் : மார்த்தாண்டம் மார்க்கெட்டில் காய்கறி விலை கிடுகிடு என்று உயர்ந்துள்ளதுமார்த்தாண்டம் மார்க்கெட் செவ்வாய்,  வெள்ளி கிழமைகளில் கூடுகிறது ஆனால் தினசரி அனைத்து காய்கறிகளும், பழங்களும் கிடைக்கும் என்ற பெருமை உண்டு ஓசூர், மதுரை, ஊட்டி போன்ற பகுதிகளில் இருந்து காய்கறி லாரிகளில் தினசரி இங்கு வருகிறதுமார்த்தாண்டம் மார்க்கெட்டில் தற்பொழுது காய்கறி விலை கிடுகிடு என்று உயர்ந்துள்ளது. கேரட் ஒரு கிலோ ₹140க்கும்,  கொத்தமல்லி ஒரு கிலோ ₹100க்கும், முருகங்காய் ஒரு கிலோ ரூபாய் ₹60க்கும், ஒட்டுமாங்காய் ஒரு கிலோ ₹100க்கும், பாவக்காய் ஒரு கிலோ ₹80க்கும், முள்ளங்கி ஒரு கிலோ ஒரு கிலோ ₹50க்கும், அன்னாசிப்பழம் ஒரு கிலோ ₹90க்கும், எலுமிச்சம்பழம் ஒரு கிலோ ₹140க்கும் விற்பனையாகிறதுவிலை உயர்ந்தாலும் வியாபாரம் அமோகமாக நடந்து வருகிறது இது குறித்து மாத்தாண்டம் மார்க்கெட் வியாபாரி சுபாஷ் கூறியதாவது:

தற்பொழுது நவராத்திரி பூஜை துவங்கியுள்ளது இதனால் காய்கறி தேவை அதிகரித்துள்ளது தேவைக்கு ஏற்ப காய்கறி தற்பொழுது மார்க்கெட்டிற்கு வருவதில்லை இதனால் விலை ஏறி உள்ளது  அடுத்த நான்கு நாட்கள் மேலும் விலை உயரலாம் என்று எதிர்பார்க்கிறோம் நவராத்திரி பூஜை முடிந்த பிறகு விலை குறையலாம். தற்பொழுது மழையும் குறைவாக உள்ளது இதனால் உற்பத்தியும் பாதிப்படையும் இதுவும் ஒரு காரணமாக உள்ளது இவ்வாறு அவர் கூறினார்

பல்லாரி விலை குறைந்தது

காய்கறி விலை அதிகரித்தாலும் பல்லாரி விலை குறைந்துள்ளது ஒரு கிலோ பல்லாரி ₹ 20 க்கு விற்பனையாகிறது.  ஒரு கிலோ என்று விற்பனை செய்வதை விட இரண்டரை கிலோ பல்லாரி 50 ரூபாய் என்று விற்பனை செய்கின்றனர். மார்க்கெட்டிற்கு  பல்லாரி  வருகை அதிகரித்து உள்ளதால் விலை குறைந்ததாக வியாபாரி தெரிவித்தார்.

Related Stories: