கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்..சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவத்தில் சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று இரவு 7 தலைகள் கொண்ட ஆதிசேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி எழுந்தருளி நான்கு மாட வீதி உலா வந்தார். 2வது நாளான இன்று காலையில் 5 தலைகளுடன் கூடிய சின்ன சேஷ வாகனத்தில் மாட வீதியில் வளம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அப்போது பெரிய சேஷ வாகனத்தை, ஆதிசேஷனாகவும், சிறிய சேஷ வாகனத்தை, வாசுகியாகவும் நினைத்து கோவிந்தா.. கோவிந்தா.. என கோஷமிட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதில் பல்வேறு மாநிலத்தில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கானோர் கோலாட்டம் ஆடியும், சுவாமியின் பல்வேறு அவதாரங்களை குறிக்கும் வேடங்கள் அணிந்தும் ஊர்வலத்தில் பங்கேற்றனர். பிரமோற்சவத்தின் 2வது நாளான இன்றிரவு, சரஸ்வதி அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமிகள் எழுத்தருளிகிறார்.

Related Stories: