×

திருவொற்றியூரில் படகு சவாரிக்கு இடம் தேர்வு: ஸ்ரீஆய்வுப் பணிகள் தீவிரம், அமைச்சர் மதிவேந்தன் தகவல்

சென்னை: திருவொற்றியூர் பகுதியில் படகு சவாரி செய்வதற்கான இடம் கண்டறியப்பட்டு அதற்கான ஆய்வுப் பணிகள் சுற்றுலா துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, தமிழக சுற்றுலா துறை சார்பில் தமிழகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில், கடந்த ஆண்டு டிஸ்கவர் தமிழ்நாடு என்று முதலாம் பதிப்பு துவக்கப்பட்டது. தற்போது, டிஸ்கவர் தமிழ்நாடு இரண்டாம் பதிப்பை சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார். பின்னர், நிருபர்களுக்கு அமைச்சர் மதிவேந்தன் அளித்த பேட்டி: தமிழகத்தில் உள்ள சுற்றுலா மையங்களை உலக அளவில் தெரியப்படுத்தும் விதமாக கடந்த ஆண்டு டிஸ்கவர் தமிழ்நாடு என்று துவக்கி வைக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும்  சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கும் 10 பேரை அழைத்து, தமிழகத்திலுள்ள 10 சுற்றுலா இடங்களுக்கு சென்று அங்கு இருக்கும் பெருமையை (தொன்மை, வரலாறு பழக்க வழக்கங்களை)  மக்களுக்கு வீடியோ எடுத்து தங்களது இணையதள பக்கத்தில் பதிவிட்டு பிரபலப்படுத்துவார்கள். கொரோனா காலத்தில் சுற்றுலாத்துறை மூலமாக அரசிற்கு வருமானம் குறைவாக இருந்தது. அது தற்போது அதிகமாகியுள்ளது. சுற்றுலா தளங்களுக்கு அதிக அளவிலான வால்வோ பேருந்துகளை இயக்க அரசு ஏற்பாடு செய்து வருகிறது. தமிழகத்தில் உள்ள சுற்றுலா மையங்களை இந்தியா முழுதும் பிரபலப்படுத்துவதற்கான முயற்சிதான் இந்த டிஸ்கவர் தமிழ்நாடு பதிப்பு. கன்னியாகுமரியில் புதிய படகு இறங்குதள பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. திருவள்ளுவர் சிலையில் லேசர் மின்விளக்கு அமைக்கும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

ஜவ்வாது மலையில் சுற்றுலா மையங்களை மேம்படுத்தும் விதமாக அங்கு அட்வென்ச்சர் நிகழ்ச்சிகளை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சொகுசு கப்பல் கொண்டுவந்தாகிவிட்டது. அடுத்தகட்டமாக, ஹெலிகாப்டர் உள்ளிட்ட பல்வேறு அட்வென்ச்சர் சார்ந்த நிகழ்வுகள் கொண்டு வரப்படும்.  மெரினாவில் அலையின் சீற்றம் அதிகமாக இருப்பதால் அங்கு படகு சவாரி உள்ளிட்ட நீர் சார்ந்த பொழுதுபோக்கு விளையாட்டுகளை வேறு இடத்திற்கு, அதாவது  திருவொற்றியூரில் படகு சவாரி செய்வதற்கான இடம் கண்டறியப்பட்டு, அதற்கான ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

*சுற்றுலா இடங்களை பிரபலப்படுத்த சமூக ஊடகவியலாளர்கள் தேர்வு
தமிழகத்தில் உள்ள சுற்றுலா இடங்களான  ஜவ்வாது மலை, கொல்லிமலை, ஒககேனக்கல், வால்பாறை உள்ளிட்ட 10 இடங்களின்  தொன்மை, அங்குள்ள மக்களின் பாரம்பரியம், உணவு பழக்க வழக்கத்தை இந்தியா  மட்டுமல்லாது உலகம் முழுவதும் பிரபலப்படுத்தும் விதமாக இந்தியாவின்  வெவ்வேறு மாநிலத்தை சேர்ந்த சமூக வலைதளங்களில் பிரபலமாக செயல்பட்டு வரும்  10 சமூக ஊடகவியலாளர்கள் தேர்வு செய்யப்பட்டு மேற்கூறிய இடங்களுக்கு  சுற்றுலா துறை சார்பில் அழைத்து செல்லப்படுகிறார்கள்.

*தமிழகத்தில் உள்ள சுற்றுலா மையங்களை உலக அளவில் தெரியப்படுத்தும் விதமாக கடந்த ஆண்டு டிஸ்கவர் தமிழ்நாடு என்று துவக்கி வைக்கப்பட்டது

Tags : Tiruvottiyur ,Minister ,Mathiventhan , Selection of a place for boating in Tiruvottiyur: Research work is intensive, Minister Mathiventhan informs
× RELATED திருவொற்றியூரில் சேதமான சாலையால் மக்கள் அவதி