வீட்டை உடைத்து 28 சவரன் கொள்ளை

சென்னை: ஆவடி அடுத்த பொத்தூர் பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன் (49). தனியார் நிறுவன கார் டிரைவர். நேற்று முன்தினம் வீட்டில் அனைவரும் வேலைக்கு சென்றுவிட்டனர். மகள் அம்பிகா காலை 8 மணி அளவில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்றுவிட்டு மாலை 3 மணி அளவில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் கிரில் கேட் மரக்கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார்.

உள்ளே சென்று பார்த்த போது படுக்கை அறை பீரோவில் இருந்த 28 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. உடனடியாக, பெற்றோருக்கு தகவல் அளித்தார். இதுபற்றி அவரது தந்தை பச்சையப்பன் ஆவடி டேங்க் பேக்டரி போலீசுக்கு தகவல் அளித்துள்ளார். போலீசார் விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: