கைப்பந்து போட்டியில் வென்ற அணிக்கு பரிசு

திருவொற்றியூர்: திருவொற்றியூர் கைப்பந்தாட்ட கழகம் சார்பில், ஒரு நாள் கைப்பந்தாட்ட போட்டி பூந்தோட்ட பள்ளி மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், வடசென்னை பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டு விளையாடின.  போட்டியை மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசு துவக்கி வைத்தார்.

இறுதிப்போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், கைப்பந்தாட்ட கழக நிர்வாகிகள் வரதராஜன், டி.வி.எம்.சேவா, பாலம் தொண்டு நிறுவன தலைவர் இருளப்பன், ஜெயக்குமார், சுகுமார், திமுக நிர்வாகிகள் ஆர்.சி.ஆசைதம்பி, அன்புச்செழியன், மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: