மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

சென்னை: ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி, ஆவடி செக்போஸ்ட் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பத்தாம் படித்து வருகிறார். இவருக்கு, திருவள்ளூர் பகுதியை சேர்ந்த தோழியின் உறவினரான யுவராஜ் (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 21ம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி, வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து, முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்தில், சிறுமியின் தாய் புகார் அளித்தார்.

முதற்கட்ட விசாரணையில், தலக்காஞ்சேரி பகுதியை சேர்ந்த யுவராஜ் ஆசைவார்த்தை கூறி மாணவியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அதில், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். பிறகு மாணவியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். யுவராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: