ஆன்லைன் வர்த்தக கிடங்கில் 9 செல்போன்களை திருடிய டெலிவரிபாய் சிக்கினார்

திருவொற்றியூர்: மாதவரம் ஜி.என்.டி சாலையில் பிரபல ஆன்லைன் வர்த்தக கிடங்கு உள்ளது. இங்கு சில மாதங்களாக செல்போன்கள் மற்றும் அதன் உதிரி பாகங்கள்  திடீர் திடீரென காணாமல் போனது. இதுதொடர்பாக, நிறுவனத்தின் மேனேஜர் அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது அங்கு பணிபுரிந்த ஊழியரே செல்போன் திருடியது தெரியவந்தது.

விசாரணையில், நிறுவனத்தில் டெலிவரி பாயாக பணியாற்றிய கவுதம் (28), செல்போன்கள் மற்றும் உதிரி பாகங்களை திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, மேனேஜர் முத்து மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் கவுதமனை கைது செய்தனர். பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: