வியாபாரி தீக்குளிப்பு

அண்ணாநகர்: அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (30). இவர் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் பிரேம்குமாருக்கும், மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் விரக்தி அடைந்த பிரேம்குமார், தனது பைக்கில் இருந்த பெட்ரோலை எடுத்து தனக்குத்தானே உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.  30 சதவீத தீக்காயத்துடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories: