ராஷ்மிகாவுக்கு மூட்டு வலி பிரச்னை: படப்பிடிப்பை ரத்து செய்தார்

விஜயவாடா: கடுமையான மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறார் ராஷ்மிகா. இதனால் படப்பிடிப்பையும் ரத்து செய்துவிட்டார். புஷ்பா படத்துக்கு பிறகு முன்னணி நடிகைகள் வரிசைக்கு வந்துள்ளார் ராஷ்மிகா. இப்போது விஜய்யுடன் வாரிசு படத்தில் நடிக்கிறார். புஷ்பா 2வில் நடித்தபடி இந்தியில் அமிதாப் பச்சனுடன் குட்பை, சித்தார்த் மல்ஹோத்ராவுடன் மிஷன் மஜ்னு ஆகிய படங்களிலும் நடிக்கிறார். இந்நிலையில் அடுத்த மாதம் வெளியாக உள்ள தனது குட்பை படத்துக்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் ராஷ்மிகா பங்கேற்று வந்தார். அப்போது அவருக்கு மூட்டு வலி ஏற்பட்டது. இதை சாதாரணமாக அவர் எடுத்துக்கொண்டார்.

ஆனால் தற்போது வலி அதிகரித்து அவரது உடல் நிலையும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மும்பையில் நடைபெற இருந்த மிஷன் மஜ்னு படத்தின் படப்பிடிப்பை அவர் ரத்து செய்துவிட்டார். அதேபோல், குட்பை படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாமல் ஐதராபாத் திரும்பினார். இந்நிலையில் அல்லு அர்ஜுன் அறிவுரைப்படி விஜயவாடாவில் உள்ள மூட்டு சிகிச்சை நிபுணர் கவுரவ் ரெட்டியை ராஷ்மிகா சந்தித்தார். இப்போது ராஷ்மிகாவுக்கு கவுரவ் ரெட்டி சிகிச்சை அளித்து வருகிறார். ‘சாமி சாமி பாடலுக்கு சிரத்தை எடுத்து டான்ஸ் ஆடியதால் இப்படி ஆகியிருக்கும் என ராஷ்மிகாவிடம் தமாஷ் செய்தேன். கால்சியம் குறைபாட்டால் அவருக்கு மூட்டு வலி வந்திருக்கிறது. இதற்கான உடற்பயிற்சியும் சொல்லிக்கொடுத்துள்ளேன்’ என்றார் கவுரவ் ரெட்டி.

Related Stories: