×

ரஷ்ய ராணுவத்தின் சித்ரவதை

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24ம் தேதி போர் தொடுத்தது. 7 மாதங்களாகியும் இந்த போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. உக்ரைனின் பல பகுதிகளை பிடித்துள்ள ரஷ்யா, அவற்றை தனது நாட்டுடன் இணைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் உக்ரைன், ரஷ்ய படைகளால் கைது செய்யப்பட்ட கைதிகள், பரஸ்பரம் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டனர். இவர்களில் ரஷ்ய ராணுவத்தால் கைது செய்யப்பட்ட உக்ரைன் வீரர்கள், கடுமையான சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கின்றனர்.

அதற்கு இந்த உக்ரைன் வீரரே உதாரணம். முதல் படம்: மிக்கைலோ டையனோஸ் என்ற இந்த உக்ரைன் வீரர், ரஷ்யாவிடம் சிக்கும் முன்பாக ராணுவ உடையில் கம்பீரமாக இருக்கிறார். அடுத்த படம்: ரஷ்யா படையின் சித்ரவதையால் உருக்குலைந்து உள்ள இப்போதைய தோற்றம். இவருக்கு கீவ் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Tags : Russian Army , Torture by the Russian Army
× RELATED பாலியல் பலாத்கார சட்டத்தை கடுமையாக்க...