×

சில்லிபாயின்ட்....

* கவாஸ்கர், சாஸ்திரிக்கு கவுரவம்
அகில இந்திய விளையாட்டு செய்தியாளர்கள் கூட்டமைப்பு சார்பில், இந்திய அணி முன்னாள் நட்சத்திரங்கள் சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி கவுரவிக்கப்பட்டனர். இதையொட்டி திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பதக்கங்கள் மற்றும் வாழ்நாள் உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட்டது.

* மகளிர் ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 4 இடங்கள் முன்னேறி 5வது இடத்தை பிடித்துள்ளார்.

* இங்கிலாந்தில் நடக்கும் கவுன்டி சாம்பியன்ஷிப்பில் கிளமார்கன் அணிக்காக விளையாடும் இந்திய வீரர் ஷுப்மன் கில், சசெக்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனது முதல் சதத்தை (119 ரன், 139 பந்து, 16 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசியுள்ளார்.

* 2023 உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி தொடரில் இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை சந்திக்கிறது (ரூர்கேலா, ஜன. 13). அடுத்து இங்கிலாந்து (ரூர்கேலா, ஜன. 15), வேல்ஸ் (புவனேஸ்வர், ஜன. 19) அணிகளின் சவாலை எதிர்கொள்கிறது.

* ரஞ்சி சாம்பியன் சவுராஷ்டிரா அணியுடன் இரானி கோப்பையில் (ராஜ்கோட், அக். 1-5) மோதவுள்ள இதர இந்திய அணி விவரம்: ஹனுமா விஹாரி (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், பிரியங்க் பாஞ்சால், மயாங்க் அகர்வால், சர்பராஸ் கான், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், யஷ் துல், கே.எஸ்.பரத் (கீப்பர்), உபேந்திரா யாதவ் (கீப்பர்), குல்தீப் சென், உம்ரான் மாலிக், முகேஷ் குமார், அர்ஸன் நக்வஸ்வாலா, ஜெயந்த் யாதவ், சவுரவ் குமார்

Tags : Sillypoint….
× RELATED சில்லிபாயின்ட்...