கியூபாவில் ஒரே பாலின திருமணத்துக்கு அனுமதி: பொது வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிப்பு

ஹவானா: கியூபாவில் ஒரே பாலின திருமணங்கள் பொது வாக்கெடுப்பு மூலம் சட்டமாக்கப்பட்டுள்ளது. கியூபாவில் கம்யூனிச ஆட்சி நடந்து வருகிறது. இங்கு ஒரே பாலின திருமணம், குழந்தைகளை தத்தெடுப்பது, வாடகை தாய் மூலம் குழந்தை பெற அனுமதிப்பது தொடர்பாக ‘குடும்ப சட்டம்’ கொண்டு வந்து சட்டமாக்க தீர்மானிக்கப்பட்டது. கடந்த 2019ம் தேதி கொண்டு வரப்பட்ட இச்சட்டத்துக்கு மத தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், ஒரே பாலின திருமணம் மற்றும் தத்தெடுப்பு சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டுமா என்று அதை சட்டமாக்குவது குறித்து வாக்கெடுப்பு நடத்திட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று தேர்தல் நடந்தது. 16 வயதுக்கும் மேற்பட்ட 84 லட்சம் மக்கள் வாக்களித்தனர்.

அதிபர் மிகுவல் டயஸ்-கனெல் மற்றும் அவரது மனைவி ஹவானா ஆகியோரும் வாக்குச்சாவடிக்கு சென்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இத்தேர்தலில் மேற்கண்ட சட்டங்களை ஏற்று கொள்கிறீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ஆம், இல்லை என்ற பதில்கள் மட்டுமே இருந்தது. இறுதியில் குடும்ப சட்டத்துக்கு ஆதரவாக 66.9 சதவீத வாக்குகள் பதிவானது. 33% பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் மூலம், ஒரே பாலின திருமணங்கள், தன்பாலின சேர்க்கையாளர்கள் குழந்தைகளை தத்தெடுக்கலாம். இதை தன் பாலின சேர்க்கையாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Related Stories: