ஓபிஎஸ் சட்டத்துக்கு அப்பாற்பட்டவரா? ஜெயக்குமார் பேட்டி

சென்னை: ஓபிஎஸ் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார். சென்னையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று அளித்த பேட்டி: ஓ.பன்னீர்செல்வத்தின் விசுவாசியாக இருக்கின்ற ஜே.சி.டி.பிரபாகர் அதிமுக அலுவலகத்தில் எடுக்கப்பட்ட ஆவணங்களும் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் தான் உள்ளது என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஓபிஎஸ் வீட்டிற்கு காவல் துறை செல்லவில்லை. அப்படி என்றால் ஓ.பன்னீர்செல்வமும், காவல்துறையும் கைகோர்த்துள்ளார்கள். கொளத்தூர் கிருஷ்ண மூர்த்தியைக் கணக்கு காண்பிக்க வேண்டும் என்பதற்காக அவர் வீட்டிலிருந்து எடுத்தது போல காண்பிக்கிறார்கள். சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஓ.பன்னீர்செல்வம் என்ன சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா? என்றார்.

Related Stories: