பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் காவல்துறையின் நடவடிக்கையால் வன்முறை கட்டுக்குள் வந்துள்ளது: அண்ணாமலை பேட்டி

திண்டுக்கல்: காவல்துறையினரின் தீவிர நடவடிக்கையால் வன்முறை சம்பவங்கள் கட்டுக்குள் வந்துள்ளதாக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். திண்டுக்கல்லில்  பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘பாஜ மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக, பாஜ நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீது சில விஷமிகள் தாக்குதலை தொடுத்துள்ளனர். தீ வைப்பு சம்பவங்கள் மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சினால் பாதிக்கப்பட்ட பாஜவினருக்கு கட்சி உறுதுணையாக நிற்கிறது. பாஜவினருக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை சரி செய்து கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறையினரின் தீவிர நடவடிக்கையால், வன்முறை சம்பவங்கள் கட்டுக்குள் வந்துள்ளன. எனினும், தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: