×

சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு சேலம் முன்னாள் எஸ்பி சாட்சியம்

விழுப்புரம்: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி மற்றும் அப்போதைய செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் ஆகியோர் மீதான வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று இவ்வழக்கு நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு சாட்சியான சேலம் மாவட்ட முன்னாள் எஸ்பி குணசேகரன் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து விசாரணையை மீண்டும் நாளைக்கு ஒத்திவைத்து நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார்.

Tags : Salem ,Ex-SP ,DGP , Salem Ex-SP Testifies in Sex Case Against Special DGP
× RELATED சேலம் அருகே வெல்லம் தயாரிக்கும்...