×

தனுஷ்கோடி வந்த 6 பேர் கைது இலங்கை கடற்படை நடவடிக்கை

ராமேஸ்வரம்:  இலங்கையில் இருந்து நேற்று முன்தினம் இரவில் படகில் வந்த 3 சிறுவர்கள் உள்ளிட்ட 6 இலங்கை தமிழர்கள்  ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடல் மணல் திட்டு பகுதியில் படகோட்டிகளால் இறக்கி விடப்பட்டதாகவும், மணல் திட்டில் இவர்கள் தவிப்பதாகவும் நேற்று அதிகாலை தகவல் பரவியது. தொடர்ந்து மரைன் போலீசார், தனுஷ்கோடி பகுதியில் சென்ற போது அங்கு யாரும் இல்லை. இதற்கிடையில் இலங்கை கடல் எல்லைக்குள் உள்ள மணல் திட்டில் தவித்து கொண்டிருந்த 6 பேரையும், அந்நாட்டு கடற்படையினர் கைது செய்து  தலைமன்னாருக்கு அழைத்து சென்று விட்டதாக   தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Dhanushkodi ,Sri Lankan Navy , 6 people who came to Dhanushkodi were arrested by the Sri Lankan Navy
× RELATED இலங்கை கடற்படை கைது செய்துள்ள...