ரூ.500 லஞ்சம் வாங்கிய எஸ்ஐக்கு 3 ஆண்டு சிறை

ஈரோடு: ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷனில் கடந்த 2009ல் எஸ்ஐயாக இருந்தவர் சந்திரன் (58). இவர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அம்மாபேட்டையை சேர்ந்த செல்லமுத்து என்பவரிடம் ஒரிஜினல் டிரைவிங் லைசன்சை பறித்துக்கொண்டார். அதை திரும்ப கேட்டபோது, ரூ.500 லஞ்சம் கேட்டுள்ளார். புகாரின்படி ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனைப்படி 2009 பிப்4ம் தேதி செல்லமுத்து, எஸ்ஐ சந்திரனிடம் ரூ.500 லஞ்சம் கொடுத்தார். அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். இவ்வழக்கை ஈரோடு முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணன் விசாரித்து எஸ்ஐ சந்திரனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

Related Stories: