யோகா மருத்துவப் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: ஓமியோபதி துறை இயக்குநரகம் அறிவிப்பு

சென்னை: ஓமியோபதி துறை இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கை: அரசு மற்றும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் பி.என்.ஒய்.எஸ். மருத்துவப் பட்டப்படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேட்டினை www.tnhealth.tn.gov.in என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பிற விவரங்களுக்கு www.tnhealth.tn.gov.in  என்ற இணையதளத்தில் உள்ள தகவல் தொகுப்பேட்டில் அறியலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், கோரப்பட்டுள்ள சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை இயக்குநரகம், சென்னை-600 106 என்ற முகவரிக்கு வரும் 19ம் தேதி  மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை பதிவிறக்கம் செய்யும் காலம் இன்று முதல் அக்டோபர் 19ம் தேதி முடிய மாலை 5 மணி வரைபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் தபால், கூரியர் சேவை வாயிலாக சமர்ப்பிக்கவோ அல்லது நேரில் சமர்ப்பிக்கவோ கடைசி நாள் அக்டோபர் 19ம் தேதி மாலை 5.30 மணி வரை.

Related Stories: