தமிழகத்தில் தலைவர்கள் சிலைகள் அவமதிப்பு விவகாரம் சென்னையில் பெரியார், அண்ணா சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு

சென்னை: சென்னை முழுவதும் உள்ள பெரியார் மற்றும் அண்ணா சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விழுப்புரம் கண்டமங்கலம் பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு நேற்று முன்தினம் அதிகாலை மர்ம நபர்கள் சிலர் முகத்தில் காவிதுண்டு போட்டு கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து சென்றனர். இதை கண்டு பொதுமக்கள் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதைதொடர்ந்து அண்ணா சிலையை அவமதிப்பு செய்த 3 நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், சென்னையில் மர்ம நபர்கள் எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவங்களை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பெரியார் மற்றும் அண்ணா சிலைகளுக்கு அந்தந்த மாவட்ட காவல் துறை சார்பில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை பெரியார் சிலைகள் 47 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், அண்ணா சிலைகள் 17 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. தலைவர்கள் சிலைகள் அவமதிப்பை தொடர்ந்து அண்ணா சாலையில் உள்ள பெரியார் மற்றும் அண்ணா சிலை உட்பட மொத்தம் 67 தலைவர்கள் சிலைகளுக்கு நேற்று அதிகாலை முதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories: