சி.பா.ஆதித்தனார் பிறந்த நாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை: சி.பா.ஆதித்தனார் பிறந்த நாளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் கூறியுள்ளதாவது: தமிழ் இதழியலின் முன்னோடியான சி.பா.ஆதித்தனார் 118வது பிறந்தநாள் இன்று. உண்மையின் பக்கம் நின்று, மனித சமூகம் முன்னேற்றம் அடைவதற்கான முற்போக்குச் சிந்தனைகளைப் பாமர மக்களிடமும் கொண்டு செல்லும் இதழியல் பணிக்கு வேர் அவர். பொய்கள் சூழ் உலகில் இதழியலுக்கு அறமே அச்சாணி. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: