×

வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதாக பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: பொதுவெளியில் தோன்றினார் சீன அதிபர் ஜி ஜின்பிங்..!

பெய்ஜிங்: வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதாக பரவிய வதந்திகளுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் முற்றுப்புள்ளி வைத்தார். சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக நேற்றில் இருந்து உலகம் முழுவதும் செய்திகள் பரவி வருகின்றன. மேலும் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. மேலும் சீனாவின் ஒட்டுமொத்த ஆட்சியும் மக்கள் விடுதலை ராணுவத்தின் கைகளுக்குப் போய்விட்டதாக செய்திகள் வந்தன.  இந்த யூகத்திற்கு வலு சேர்க்கும் வகையில் ஜி ஜின்பிங்கும் கடந்த சில நாட்களாக பொது வெளியில் தோன்றாமல் இருந்தார்.

ஆனால் சீனாவின் ஆளும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியோ அல்லது அரசு ஊடகமோ இதுவரை அதிகாரப்பூர்வ எவ்வித தகவலையும் வெளியிடவில்லை. இந்நிலையில் பொதுவெளியில் தோன்றி சீன அதிபர் ஜி ஜின்பிங் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். சீன அதிபர் ஜி ஜின்பிங் பெய்ஜிங்கில் நடந்து வரும் கண்காட்சியில் பங்கேற்றார். பீஜிங் நகரில் உள்ள கண்காட்சியை அவர் பார்வையிட்ட காட்சிகளை, அந்நாட்டு அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. செப். 16-க்கு பிறகு முதன் முறையாக அதிபர் ஜின்பிங் பொதுவெளியில் தோன்றியுள்ளார்.

Tags : xi jinping , An end to rumors that he was placed under house arrest: Chinese President Xi Jinping appeared in public..!
× RELATED தைவானுக்கு எதிராக போர் தொடுக்கிறதா சீனா?.. சீ சின்பிங் உத்தரவால் பதற்றம்..!